இணையத்தில் வெளியான ரஜினிகாந்தின் ‘காலா’ படக் காட்சி: படக்குழு அதிர்ச்சி!

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள ‘காலா’ படத்தின் சில காட்சிகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ‘கபாலி’ படத்தை இயக்கிய பா. ரஞ்சித் இயக்கத்தில் தற்போது ரஜினிகாந்த் நடித்துவரும் படம், ‘காலா’. படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. இப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ், ஏப்ரல் 27ஆம் தேதி ‘காலா’ திரைக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் கதாநாயகியாக கியூமா குரோஷி நடித்துள்ளார். சமுத்திரக்கனி, நானா படேகர், அஞ்சலி பட்டீல், சாயாஜி ஷிண்டே ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு மும்பையில் உள்ள தாராவி பகுதியில் நடந்தது. நெல்லையில் இருந்து மும்பைக்கு சென்ற தமிழர் தாதாவாக மாறி, அங்குள்ள தமிழர் களுக்கு நன்மைகள் செய்வது போன்று இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது. ரஜினிகாந்த் தாதாவாக நடித்துள்ளார்.

இந்நிலையில், ரஜினிகாந்தை வில்லன் இரும்பு கம்பியால் தாக்க வருவது போன்றும், பதிலுக்கு ரஜினி காலால் எட்டி உதைப்பது போன்றும், ‘காலா’ படத்தில் இருந்து ஒரு காட்சி இணையத்தில் வெளியானது. இதனை பலரும் பதிவிறக்கம் செய்து வருகிறார்கள்.

முன்னதாக, இந்த படத்தின் புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் வந்தன. படப்பிடிப்பை சிலர் திருட்டுத்தனமாக படம் பிடித்து வெளியிட்டனர். தற்போது படத்தின் சில காட்சிகளே வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காட்சியை இணையதளத்தில் வெளியிட்டது யார் என்று படக்குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். காவல்துறையில் புகார் அளிப்பது குறித்தும் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.

இணையத்தில் வெளியான ‘காலா’ படக் காட்சி:

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *