கீர்த்தனா – அக்சய் நிச்சயதார்த்தம்: நடிகை சீதா, நடிகர் பார்த்திபன் கலந்துகொண்டனர்!

‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கீர்த்தனாவுக்கும் ‘பீட்சா’ படத்தை இந்தியில் எடுத்த இயக்குநர் அக்சய்க்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடந்தது. இதில் கீர்த்தனாவின் அம்மாவான நடிகை சீதாவும், அப்பாவான பார்த்திபனும் கலந்துகொண்டனர்.

மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்குள் நுழைந்தவர், கீர்த்தனா. தொடர்ந்து இயக்குநர் மணிரத்னத்திடம் சில படங்களுக்கு உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார். தற்போது புதிய படம் இயக்கும் முயற்சியில் உள்ளார். பார்த்திபன் படங்களின் கதை உருவாக்கத்திலும் கலந்துகொள்கிறார்.

கீர்த்தனா நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் – நடிகை சீதா மகள் ஆவார். பார்த்திபனும் சீதாவும் பல வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். கீர்த்தனா தந்தை பார்த்திபன் பராமரிப்பில் வளர்ந்தார்.

இந்நிலையில் கீர்த்தனாவுக்கும் இந்தி ‘பீட்சா’ இயக்குநர் அக்சய்க்கும் காதல் மலர்ந்தது. அக்சய், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் மகன் ஆவார். இதனையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்கள் திருமணம் வருகிற மார்ச் 8-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இவர்கள் திருமணம் குறித்து ஊடகவியலாளர்களுடன் பேசிய பார்த்திபன், “ கீர்த்தனா திருமணத்தில் நடிகை சீதா கலந்துகொள்வார்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் கீர்த்தனா – அக்ஷய் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடந்தது. இதில் நடிகர் பார்த்திபனும் நடிகை சீதாவும் கலந்துகொண்டனர். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களும் பங்கேற்றார்கள்.

கீர்த்தனா-அக்ஷய் திருமணம் அடுத்த மாதம் (மார்ச்) 8-ந்தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *