சினிமாவை மிஞ்சும் கொடூரம்: பாலியல் துன்புறுத்தல் செய்து கம்பியால் தாக்கப்பட்ட பெண் மென் பொறியாளர்!

சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில், மென் பொறியாளரான பெண் ஊழியர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானார். மேலும், அவரிடமிருந்து 15 சவரன் தங்க நகை, விலை மதிப்புள்ள ஐ போன் பறிக்கப்பட்டது. பாதிப்புக்குள்ளான அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ராதா (வய து 30, பெயர் மாற்றப்பட்டுள்ளது). மென் பொறியாளரான இவர் சென்னையை அடுத்த நாவலூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிகிறார். இவர் நாவலூர் அருகில் உள்ள பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இவர் சென்னையை நோக்கி, தாழம்பூர்-பெரும்பாக்கம் பிரதான சாலையில் அவருடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், பின் பக்க தலையில் அடித்ததில் சாலையின் நடுவில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். ரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்து கிடந்த ராதாவை சாலையோரம் உள்ள காலி இடத்திற்கு தூக்கிச்சென்று அவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபர்கள் பின்னர் அவர் அணிந்திருந்த 15 சவரன் தங்க செயின், விலை மதிப்புள்ள ஐ போன் ஆகியவற்றை பறித்துச்சென்றனர்.

தட்டுத்தடுமாறி சாலையோரம் வந்து மயங்கி விழுந்த ராதா, மயக்க நிலையில் நள்ளிரவு முதல் காலை வரை சாலையோரத்தில் கிடந்துள்ளார். காலையில் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதைப் பார்த்துவிட்டு பள்ளிக்கரணை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிக்கரணை காவல்துறையினர் ராதாவை மீட்டு சிகிச்சைக்காக பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் சாரங்கன், சென்னை தெற்கு இணை ஆணையர் அன்பு, பரங்கிமலை துணை ஆணையர் முத்துசாமி, உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சென்னையில் பட்டப்பகலில் இரண்டு பெண்களிடம் செயின் பறிப்பு செய்யப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து நடந்துள்ள இந்த சம்பவம், சென்னை சாலைகளில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதையே காட்டுகிறது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *