தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’: கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு செல்கிறது!

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அனுப்ப படக்குழு திட்டமிட்டுள்ளது.

‘ஆரண்ய காண்டம்’ படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் தியாகராஜன் குமாரராஜா. இவர் தற்போது ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி, சமந்தா, ஃபகத் பாசில், இயக்குநர் மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை தியாகராஜன் குமாரராஜாவே தயாரித்துள்ளார். இந்திய அரசின் பண மதிப்பு நீக்கப் பிரச்சினையால், இதன் படப்பிடிப்பு இடையில் தடைபட்டது. தற்போது வேகமாக இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

யுவன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம், பி.எஸ்.வினோத், நீரவ்ஷா என 3 ஒளிப்பதிவாளர்கள் பணிபுரிந்துள்ளார்கள். சில்பா என்ற திருநங்கையாக விஜய்சேதுபதி, வியம்பு என்ற கதாபாத்திரத்தில் சமந்தா, பாதிரியார் வேடத்தில் மிஷ்கின் என இப்படம் குறித்த தகவல்கள் யாவுமே புதுமையாக இருப்பதால், படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்து, திரைப்பட விழாவுக்கான எடிட்டிங்கை முடித்து, இப்படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அனுப்ப படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *