வைரல் காணொளி: கூகிளில் இந்தியாவே தேடும் பிரியா வாரியார்; ரசிகர்களுக்கு நன்றி!

ஒரே காணொளியில் இந்தியா முழுவதும் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு பிரபலமாகியுள்ளார் பிரியா வாரியர். கடந்தவார கூகுள் தேடலில் பாலிவுட் நடிகைகள் சன்னி லியோன், கத்ரீனா கைப் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோரை அடுத்து அதிகம் தேடப்பட்டவர் பிரியா வாரியர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு கொச்சியில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆடிய நடனம் கடந்த ஆகஸ்ட் மாதம் யூடியுப் தளத்தில் பதிவேற்றப்பட்டது. அது இந்திய அளவில் பிரபலமானது. தற்போதுவரை அந்த காணொளிவை 18 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இதுபோல் மற்றொரு காணொளியும் தற்போது இந்தியா முழுவதும் பிரபலமாகி வருகிறது.

‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள படத்திற்காக எடுக்கப்பட்ட, ‘மாணிக்ய மலரேயா பூவி’ என்ற பாடல் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு ஷான் ரஹ்மான் இசை அமைத்துள்ளார். நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் வினீத் ஸ்ரீனிவாசன் பாடியுள்ளார். ஜிமிக்கி கம்மல் பாடலையும் இவரே பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த பாடலில் இடம்பெற்றுள்ள நடிகை பிரியா பிரகாஷ் வாரியரின் கண் அசைவு காட்சியால் இந்த காணொளி வைரலாகியுள்ளது. இவரது இன்ஸ்டாகிராம் காணொளி அப்லோடு செய்த 24 மணி நேரத்தில் 6 லட்சத்திற்கும் அதிகமான பலோவர்களை பெற்றது. இதனால் கேரளா மட்டும் இன்றி நாடு முழுவதும் ஒரே நாளில் பிரபலமாகிவிட்டார் ப்ரியா.

தன் மீது ரசிகர்கள் வைத்துள்ள பாசத்தை பார்த்து நெகிழ்ந்த ப்ரியா அவர்களுக்கு நன்றி தெரிவித்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். பாடலை போன்றே படத்திற்கும் ஆதரவு அளிக்குமாறு கேட்டுள்ளார். இந்நிலையில், மலையாள மனோரமாவுக்கு பிரியா பிரகாஷ் வாரியர் அளித்த பேட்டியில், “நான் திருச்சூர் விமலா கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வருகிறேன். நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். எங்கள் ,வீடு திருச்சூர் பூங்குன்னத்தில் உள்ளது . எனது தந்தை பிரகாஷ் மத்திய காலால் துறையில் பணியாற்றி வருகிறார். எனது தயார் பிரீத்தா இல்லத்தரசி. எனது இளையசகோதரர் பிரசித் தாத்தா பாட்டியுடன் உள்ளார்.

எனக்கு 18 வயதாகிறது. கேரளா திருச்சூர்தான் என் சொந்த ஊராகும். நான் மோகினியாட்ட கலைஞர். ‘ஒரு அடார் லவ்’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ளேன். அதற்காக, நான் இந்த வரவேற்பை எதிர்பார்க்கவில்லை. இதை அதிகப்படியாக உணர்கிறேன். எனது உற்சாகத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று எனக்கு தெரியவில்லை. இந்த பாடலின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக என் கல்லூரியில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள். இவை அனைத்தும் எனக்கு புதிய அனுபவங்கள். இத்தகைய ஆதரவு எப்போதும் என்னுடன் தொடர்ந்து இருக்க வேண்டும் என விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

கடந்தவார கூகுள் தேடலில் பாலிவுட் நடிகைகள் சன்னி லியோன், கத்ரீனா கைப் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோரை அடுத்து அதிகம் தேடப்பட்டவர் பிரியா வாரியர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணிக்ய மலரேயா பூவி பாடல்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *