பிரித்தானிய இளவரசர் ஹரி – மேர்கன் திருமண நிகழ்வு : கென்சிங்டன் அரண்மனை தகவல்

பிரித்தானிய இளவரசர் ஹரி – மேகன் மெர்க்கல் திருமணம் எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த திருமண நிகழ்வின் சில முக்கிய விடயங்களை கென்சிங்டன் அரண்மனை (Kensington Palace) தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதன்படி விண்ஸ்டர் கேஸ்டிலில் உள்ள St George’s Chapel-ல் ஹரி – மெர்க்கல் திருமண சடங்குகள் மதியம் 12 மணிக்கு ஆரம்பமாகி 1 மணிக்குள் ஹரி – மெர்க்கல் திருமணம் முடிந்துவிடும். திருமணத்தை பேராயர் நடத்தி வைக்கவுள்ளார்.

அதன் பின்னர் புதுமண தம்பதிகள் வாகன ஊர்வலமாக விண்ட்ஸ்டர் நகரை சுற்றி வந்து மக்களை சந்திப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மீண்டும் St George’s Chapel-லுக்கு வரும் தம்பதிகள் அங்கு நடத்தப்படும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விருந்தினர்களுடன் கலந்து கொள்வார்கள்.

அதன் பின்னர், அன்றைய தினம் மாலை இளவரசர் சார்லஸ் தலைமையில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் பங்குபெறும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *