மீண்டும் வருகிறார் மீரா ஜாஸ்மின்: மோகன்லாலுடன் புதிய படத்தில் நடிக்கிறார்!

நடிகை மீரா ஜாஸ்மின் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

தமிழில் ‘ரன்’ படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். ‘சண்டக்கோழி’, ‘புதிய கீதை’, ‘ஆஞ்சனேயா’, ‘ஆயுத எழுத்து’, ‘திருமகன்’, ‘பரட்டை என்கிற அழகு சுந்தரம்’, ‘பெண் சிங்கம்’ உள்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர்.

மீரா ஜாஸ்மின் 2014-இல் துபாயைச் சேர்ந்த பொறியாளரை திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு விலகினார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவர் திரைப்படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக தமிழ், மலையாள இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறார். மோகன்லாலுடன் புதிய படத்தில் அவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருமணத்துக்கு பிறகு மீரா ஜாஸ்மின் எடை கூடியிருக்கிறார். தற்போது அவர் பருமனாக இருக்கும் தோற்றம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *